தமிழ் அவசரம் யின் அர்த்தம்

அவசரம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  (குறுகிய காலத்தில் காரியங்களை முடித்துவிட முயலும்) விரைவு; வேகம்; பரபரப்பு.

  ‘விவரம் தெரிந்தவர்கள்கூட அவசரத்தில் போலியை அசல் என்று நினைத்துவிடுகிறார்கள்’
  ‘அவசரம்அவசரமாக வேலையை முடித்துவிட்டு விமானத்தில் புறப்பட்டார்’

 • 2

  (இனியும் தாமதிக்க முடியாது என்ற) உடனடித் தன்மை.

  ‘ஆயிரம் ரூபாய் அவசரமாக வேண்டும்’
  ‘நோயாளிக்கு அவசரச் சிகிச்சை அளிக்கப்பட்டது’

 • 3

  உடனடித் தேவை.

  ‘உன் அவசரத்துக்கு ஆயிரம் ரூபாய்கூடப் போதாதே’
  ‘கல்யாணத்துக்கு இப்போது என்ன அவசரம்?’