தமிழ் அவதிப்படு யின் அர்த்தம்

அவதிப்படு

வினைச்சொல்-பட, -பட்டு

  • 1

    (நோய், வறுமை முதலியவற்றால்) துன்பப்படுதல்.

    ‘என் மாமனார் பத்து வருடங்களாகக் கடும் வயிற்று வலியால் அவதிப்படுகிறார்’
    ‘நாம் அன்னிய ஆட்சியின் அடக்குமுறைக்கு ஆளாகி அவதிப்பட்டோம்’
    ‘ரயிலில் இடம் கிடைக்காமல் அவதிப்பட்டேன்’