தமிழ் அவமானப்படு யின் அர்த்தம்

அவமானப்படு

வினைச்சொல்-பட, -பட்டு

 • 1

  மதிப்பு, மரியாதை முதலியவை இழந்த நிலையை அடைதல்.

  ‘உன் பேச்சைக் கேட்டுத் திருமணத்துக்கு வந்து நான் அவமானப்பட்டது போதாதா?’
  ‘இனியும் நான் இவருக்குக் கீழ் வேலை பார்த்து அவமானப்பட முடியாது’
  ‘நம் கண்ணெதிரே நடக்கும் அநியாயத்தைத் தட்டிக்கேட்க முடியாததற்காக நாம் அவமானப்பட வேண்டும்’
  ‘என்னுடைய நேரடிப் பொறுப்பில் உள்ள துறையில் இப்படி ஒரு அவமானப்படத்தக்க சம்பவம் நடந்ததற்காக நான் வருந்துகிறேன்’