தமிழ் அவர்கள் யின் அர்த்தம்

அவர்கள்

பிரதிப்பெயர்

 • 1

  உயர்திணைப் பன்மைப் படர்க்கைப் பெயர்.

 • 2

  ஒருவருடைய பெயரை அல்லது பதவியை அடுத்து மரியாதைக்காக இடப்படும் பிரதிப்பெயர்.

  ‘திரு.வி.கல்யாண சுந்தரனார் அவர்கள்’
  ‘கல்வி அமைச்சர் அவர்கள்’
  ‘பேராசிரியை அவர்கள்’