தமிழ் அவலம் யின் அர்த்தம்

அவலம்

பெயர்ச்சொல்

 • 1

  வருந்தத்தக்க அல்லது இரங்கத்தக்க நிலை.

  ‘வறுமைதான் இந்த நாட்டின் அவலம்’

 • 2

  துன்பம்.

  ‘அநீதிகளையும் அவலங்களையும் மக்களால் எப்படிப் பொறுத்துக்கொள்ள முடிகிறது?’

 • 3

  (பெரும்பாலும் பெயரடையாக) (இலக்கியத்தைக் குறித்து வருகையில்) துன்ப உணர்வை அல்லது முடிவை வெளிப்படுத்தும் தன்மை.

  ‘கிரேக்க அவல நாடகங்கள்’
  ‘அவலக் காப்பியம்’
  ‘அவலச் சுவை நிரம்பிய கவிதை’