தமிழ் அவ்வப்போது யின் அர்த்தம்

அவ்வப்போது

வினையடை

 • 1

  நேரம் கிடைக்கும்போதெல்லாம்; சில சமயங்களில்.

  ‘அவன் அவ்வப்போது வீட்டுக்கு வந்து என்னை நலம் விசாரித்துச் செல்வான்’
  ‘தலைமைச் சமையல்காரர் அவ்வப்போது தன்னுடன் வேலை செய்பவர்களுக்குச் சமையல் குறிப்புகள் தருவார்’
  ‘நாட்டியத் துறையில் அவ்வப்போது புதிய பரிசோதனைகள் நடைபெறுகின்றன’
  ‘அப்பாவால் இந்தக் கடையை முழுநேரமாகப் பார்த்துக்கொள்ள முடியவில்லை என்பதால் அவ்வப்போது வந்துபோகிறார்’