தமிழ் அவ்வளவாக யின் அர்த்தம்

அவ்வளவாக

வினையடை

  • 1

    (எதிர்மறை வினைகளோடு மட்டும்) குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்கு.

    ‘அவருக்கு ஆங்கிலம் அவ்வளவாக வராது’
    ‘எனக்கு இசையில் அவ்வளவாக நாட்டம் இல்லை’
    ‘நானும் அவரும் அவ்வளவாகப் பேசிக் கொள்வதில்லை’