தமிழ் அவ்வளவு யின் அர்த்தம்

அவ்வளவு

பெயர்ச்சொல்

 • 1

  எல்லா; அத்தனை.

  ‘அவ்வளவு புத்தகங்களையும் படித்துவிட்டாயா?’
  ‘அவ்வளவு மாணவர்களும் புத்திசாலிகள்’

 • 2

  (குறிப்பிடப்படும்) அந்த அளவு; அத்தனை.

  ‘அவ்வளவையும் நான் கவனித்தாக வேண்டும்’

 • 3

  (அடையாக வரும்போது) அதிகம் என்று கருதும்படியான அந்த அளவு.

  ‘அவ்வளவு திமிரா அவனுக்கு?’
  ‘அவ்வளவு சொல்லியும் அவன் கேட்கவில்லை’