தமிழ் அவ்வளவுதான் யின் அர்த்தம்

அவ்வளவுதான்

இடைச்சொல்

  • 1

    ஒரு செயலுக்கு மோசமான பின்விளைவுகள் நிகழும் என்று குறிப்பிடும்போது வாக்கியத்தில் இரண்டு பகுதிகளுக்கு இடையே பயன்படுத்தும் இடைச்சொல்.

    ‘அக்காவுக்கு யாரோ காதல் கடிதம் எழுதியிருக்கிறான். இது மட்டும் அப்பா கையில் கிடைத்திருந்தால், அவ்வளவுதான்!’

  • 2

    முதல் வாக்கியத்தில் சொல்லப்பட்டது நிகழ்ந்ததற்காகவே காத்திருந்ததுபோல் மற்றொன்று நிகழ்வதைக் காட்டுவதற்காக இரண்டாவது வாக்கியத்தின் தொடக்கத்தில் பயன்படுத்தப்படும் இடைச்சொல்.

    ‘‘ஏன் ஒருமாதிரியாக இருக்கிறாய்?’ என்று கேட்டேன். அவ்வளவுதான், தன் பிரச்சினைகளைக் கொட்ட ஆரம்பித்துவிட்டாள்’