அவி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

அவி1அவி2அவி3அவி4

அவி1

வினைச்சொல்அவிய, அவிந்து, அவிக்க, அவித்து

 • 1

  வேகுதல்.

  ‘நெல் சரியாக அவியவில்லை’

 • 2

  பேச்சு வழக்கு (உஷ்ணத்தால்) புழுங்குதல்.

  ‘அவிகிற மாதிரி இருக்கிறது; ஜன்னலைத் திற’
  ‘கூளத்தைக் குப்பைக் குழியில் கொட்டினால் சீக்கிரம் அவிந்து எருவாகிவிடும்’
  உரு வழக்கு ‘அவன் பொறாமையால் அவிகிறான்’

அவி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

அவி1அவி2அவி3அவி4

அவி2

வினைச்சொல்அவிய, அவிந்து, அவிக்க, அவித்து

பேச்சு வழக்கு
 • 1

  பேச்சு வழக்கு அணைதல்.

  ‘அரிக்கன் விளக்கு அவிந்து இருள் சூழ்ந்தது’

அவி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

அவி1அவி2அவி3அவி4

அவி3

வினைச்சொல்அவிய, அவிந்து, அவிக்க, அவித்து

 • 1

  வேகவைத்தல்.

  ‘அவித்த வேர்க் கடலை’

 • 2

  வட்டார வழக்கு (இட்லி, பிட்டு போன்ற உணவுப் பொருள்களை) நீராவியில் தயாரித்தல்.

 • 3

  (அழுக்கு போவதற்காகத் துணியில்) நீராவியைச் செலுத்துதல்.

  ‘எல்லாத் துணிகளையும் வெள்ளாவியில் வைத்து அவித்தான்’

 • 4

  கொதிக்கவைத்தல்.

  ‘வயிற்றுவலிக்கு மங்குஸ்தான் கோதை அவித்துக் குடித்தால் நல்லது’

அவி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

அவி1அவி2அவி3அவி4

அவி4

வினைச்சொல்அவிய, அவிந்து, அவிக்க, அவித்து

 • 1

  (விளக்கு, அடுப்பு முதலியவற்றை) அணைத்தல்.

  ‘அடுப்பைச் சரியாக அவிக்காததால் புகை வந்துகொண்டிருக்கிறது’