தமிழ் அவிழ் யின் அர்த்தம்

அவிழ்

வினைச்சொல்அவிழ, அவிழ்ந்து, அவிழ்க்க, அவிழ்த்து

 • 1

  (கட்டு, முடிச்சு முதலியவை) பிரிதல்.

  ‘புத்தகக் கட்டின் முடிச்சு அவிழ்ந்துவிட்டது’
  ‘கூந்தல் அவிழ்ந்து தொங்கியது’

 • 2

  (ஆடை) நெகிழ்தல்; தளர்தல்.

  ‘அவிழ்ந்த வேட்டியைக் கையால் பிடித்துக்கொண்டான்’

தமிழ் அவிழ் யின் அர்த்தம்

அவிழ்

வினைச்சொல்அவிழ, அவிழ்ந்து, அவிழ்க்க, அவிழ்த்து

 • 1

  (கட்டு, முடிச்சு முதலியவற்றை அல்லது பிணைத்துக் கட்டியிருப்பதிலிருந்து ஒன்றை) பிரித்தல்.

  ‘கிழவி முந்தானை முடிச்சை அவிழ்த்துக் காசை எடுத்தாள்’
  ‘வண்டியிலிருந்து மாடுகளை அவிழ்த்துக் குளிப்பாட்ட ஓட்டிச் சென்றான்’
  உரு வழக்கு ‘அராஜகத்தை அவிழ்த்துவிட்டது யார்?’

 • 2

  (உடை முதலியவற்றை) கழற்றுதல்.

  ‘முண்டாசை அவிழ்த்து உதறினான்’
  ‘அவர் கைக்கடிகாரத்தைக் கட்டுவதும் அவிழ்ப்பதுமாக இருந்தார்’