அவை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

அவை1அவை2

அவை1

பெயர்ச்சொல்

 • 1

  அரசன் தன் அமைச்சர்களுடன் காட்சி தரும் இடம்.

  ‘பாண்டியன் அவையிலே கண்ணகி கண்ணீருடன் வந்து நின்றாள்’

 • 2

  குழு; கூட்டம்.

  ‘அறிஞர்கள் கூடியிருக்கும் இந்த அவையில் இதைத் தெரிவிக்கிறேன்’

 • 3

  சட்டசபையின் அல்லது நாடாளுமன்றத்தின் இரு அவைகளுள் ஒன்று.

  ‘கேள்வி நேரத்தில் சம்பந்தப்பட்ட அமைச்சர் அவையில் இருக்க வேண்டும்’

அவை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

அவை1அவை2

அவை2

பிரதிப்பெயர்

 • 1

  அருகில் இல்லாத அஃறிணைப் பொருள்களைச் சுட்டும் பிரதிப்பெயர்.