தமிழ் ஆக்கிரமி யின் அர்த்தம்

ஆக்கிரமி

வினைச்சொல்ஆக்கிரமிக்க, ஆக்கிரமித்து

 • 1

  (சட்ட விரோதமாக ஓர் இடத்தை, நாட்டை) கவர்ந்துகொள்ளுதல்; கைப்பற்றுதல்.

  ‘நடைபாதையை ஆக்கிரமித்துக்கொண்டிருந்த கடைகளை அகற்ற உத்தரவு’
  ‘எண்ணெய் வளம் மிக்க சிறிய நாடுகளை ஆக்கிரமிக்கும் போக்கு உலகில் காணப்படுகிறது’

 • 2

  (ஒரு சிந்தனை) மனத்தை முழுவதுமாகப் பற்றியிருத்தல்.

  ‘காலையில் அவள் கேட்ட கேள்வி நாள் முழுவதும் என் மனத்தை ஆக்கிரமித்துக்கொண்டிருந்தது’