தமிழ் ஆகட்டும் யின் அர்த்தம்

ஆகட்டும்

இடைச்சொல்

 • 1

  ஒருவர் வேண்டுவதை ஏற்றுக்கொள்ளும் முறையில் அல்லது ‘சரி’ என்ற பொருளில் வாக்கியங்களுக்கு இடையே உள்ள தொடர்பைக் குறிக்கப் பயன்படுத்தும் இடைச்சொல்.

  ‘‘நீங்கள் எனக்கு ஒரு வேலை வாங்கித் தர வேண்டும்.’ ‘ஆகட்டும், என்னால் முடிந்ததைச் செய்கிறேன்.’’

 • 2

  மாற்றாக வரும் பெயர்ச்சொற்களோடு இணைத்து ‘அவற்றை வேறுபடுத்திப் பார்க்கத் தேவையில்லை’ என்ற பொருளில் பயன்படுத்தப்படும் இடைச்சொல்.

  ‘நானாகட்டும், என் மனைவியாகட்டும் உங்களைப் பற்றி ஏதாவது குறைசொல்லியிருக்கிறோமா?’
  ‘மாதாந்திரத் தேர்வாகட்டும், ஆண்டுத் தேர்வாகட்டும் கணக்கில் அவன்தான் எப்போதும் அதிக மதிப்பெண் பெறுகிறான்’
  ‘மதுரையாகட்டும், சென்னையாகட்டும் வெயில் வாட்டியெடுக்கிறது’

 • 3

  ‘குறைந்தபட்சம்’ என்ற பொருளில் முதல் வாக்கியத்தை இரண்டாவது வாக்கியத்துடன் தொடர்புபடுத்துவதற்காக இரண்டாவது வாக்கியத்தில் உள்ள பெயர்ச்சொல்லோடு இணைக்கப்படும் இடைச்சொல்.

  ‘நீதான் சொல்லவில்லை. அவன்தான் ஆகட்டும், ஒரு வார்த்தை சொல்லியிருக்கக் கூடாதா?’