தமிழ் ஆகவே யின் அர்த்தம்

ஆகவே

இடைச்சொல்

  • 1

    ‘அதன் காரணமாக’ என்ற பொருளில் இரண்டு வாக்கியங்களைத் தொடர்புபடுத்த இரண்டாவது வாக்கியத்தின் தொடக்கத்தில் பயன்படுத்தும் இடைச்சொல்; ‘அதன் விளைவாக’; ‘அதனால்’; ‘ஆதலால்’.

    ‘காய்ச்சல் இருக்கிறது. ஆகவே பசி இல்லை’
    ‘நாம் எப்போது தவறு செய்வோம் என்று எதிரிகள் காத்திருக்கின்றனர். ஆகவே நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்’