தமிழ் ஆகா யின் அர்த்தம்

ஆகா

இடைச்சொல்

 • 1

  பாராட்டு, வியப்பு, ஏளனம் முதலிய உணர்ச்சிகளைத் தெரிவிக்கும் இடைச்சொல்.

  ‘ஆகா, என்ன வாக்கு வன்மை!’
  ‘தாஜ்மகாலை நிலவொளியில் பார்க்கிறவர்கள் ‘ஆகா, என்ன அழகு!’ என்று சொல்லாமல் இருப்பதில்லை’
  ‘மேலே படிக்கப்போகிறாயா? ஆகா! படியேன்’
  ‘பிச்சைக்காரன் தர்மம் செய்கிறானா, ஆகா!’