தமிழ் ஆகாது யின் அர்த்தம்

ஆகாது

வினைச்சொல்

உயர் வழக்கு
 • 1

  உயர் வழக்கு (-அல் அல்லது -தல் விகுதி ஏற்ற தொழிற்பெயர்களின் பின்) கூடாது.

  ‘இங்கே புகைபிடிக்கலாகாது’
  ‘பெரியவரிடம் நீ அப்படிப் பேசியிருக்கலாகாது’
  ‘பிறர் நமக்குச் செய்த உதவியை மறத்தலாகாது’
  ‘சுற்றுப்புறத்தை மாசுபடுத்தலாகாது’