தமிழ் ஆக்கம் யின் அர்த்தம்

ஆக்கம்

பெயர்ச்சொல்

 • 1

  (பயன் தருதல் தொடர்பான வழக்கு)

  1. 1.1 ஆதரவு; உதவி

   ‘இந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்கு அவர் கொடுத்த ஆக்கமே முக்கியக் காரணமாகும்’
   ‘தன் பிரச்சாரங்களுக்கு புத்தர் அரசர்களிடமிருந்து ஆக்கத்தைத் தேடினார்’
   ‘கள்ளச் சாராயத்தை எதிர்த்துப் போராடுபவர்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளிப்பது நம் கடமை’

  2. 1.2உயர் வழக்கு முன்னேற்றம்; வளர்ச்சி

   ‘அறிவியல் தமிழின் ஆக்கம் என்பது நம்மை நோக்கியிருக்கும் மிகப் பெரிய சவால்’

  3. 1.3 நன்மை தரும் முறையிலானது

   ‘இன்று நாம் பெற்றுள்ள வசதிகள் யாவும் அறிவியலால் பெற்ற ஆக்கங்களாகும்’
   ‘அணுசக்தியை ஆக்கப் பணிகளுக்கும் பயன்படுத்த முடியும்’
   ‘மனிதர்களின் ஆக்கச் செயல்களும் அழிவுச் செயல்களும்’

 • 2

  (படைப்பு தொடர்பான வழக்கு)

  1. 2.1 படைப்புத் திறன்

   ‘மாணவர்களின் ஆக்க உணர்வை ஆசிரியர்கள் புரிந்துகொள்ள வேண்டும்’
   ‘ஆக்க உணர்வு இல்லாதவர்கள் மரபைப் புரிந்துகொள்ள முடியாது’

  2. 2.2பெருகிவரும் வழக்கு இலக்கியப் படைப்பு

   ‘எங்கள் இணைய இதழுக்குத் தங்கள் ஆக்கங்களை அனுப்பும் படைப்பாளிகள் அவற்றைத் தட்டச்சு செய்து அனுப்பினால் பரிசீலிக்க முடியாது’

  3. 2.3 (ஏற்கனவே உள்ள படைப்பு பெறும் புதிய) வடிவம்

   ‘அரிச்சந்திரன் கதையின் நாடக ஆக்கம் அச்சிடப்பட்டு விற்பனைக்கு வந்தது’