தமிழ் ஆச்சரியப்படு யின் அர்த்தம்

ஆச்சரியப்படு

வினைச்சொல்-பட, -பட்டு

  • 1

    வியப்புக்கு உள்ளாதல்.

    ‘சின்னக் குழந்தை இவ்வளவு அழகாகப் பாடுகிறானே என்று ஆச்சரியப்பட்டான்’
    ‘அவன் தன் சொந்தத் தம்பிக்குத்தானே ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தான். இதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது?’
    ‘அந்தக் கோர விபத்தில் குழந்தை தப்பிப்பிழைத்ததைப் பார்த்து ஆச்சரியப்படாதவர்கள் இல்லை’