தமிழ் ஆசனம் யின் அர்த்தம்

ஆசனம்

பெயர்ச்சொல்

 • 1

  உட்காருவதற்குப் பயன்படும் சாதனம்; இருக்கை.

  ‘மெத்தென்ற ஆசனத்தில் இருந்து பழகிவிட்டது’

 • 2

  யோகப் பயிற்சியின்போது உடலை வைத்திருக்கும் நிலை.

  ‘தியானம் செய்பவர்கள் பத்மாசனத்தில் அமர்ந்திருப்பார்கள்’
  ‘சிரசாசனம்’
  ‘இதுவரை பத்து ஆசனங்கள் கற்றுக்கொண்டிருக்கிறேன்’

தமிழ் ஆசனம் யின் அர்த்தம்

ஆசனம்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு தேர்தலில் வேட்பாளர் போட்டியிடும் தொகுதி; இடம்.

  ‘தேர்தலில் உங்கள் கட்சி எத்தனை ஆசனங்களில் போட்டியிடப்போகிறது?’
  ‘இலங்கை நாடாளுமன்றத்தில் எத்தனை ஆசனங்கள் உள்ளன?’