தமிழ் ஆசாரம் யின் அர்த்தம்

ஆசாரம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  சமய, குல ஒழுக்கத்துக்கான நெறிமுறைகள்.

  ‘பாட்டியின் ஆசாரங்களில் இன்று எங்கள் வீட்டில் எஞ்சியிருப்பது காலை பூஜை ஒன்றுதான்’
  ‘அவர் தன் குல ஆசாரப்படி நடப்பவர்’
  ‘அம்மா ஆசாரமாகச் சமைப்பாள்’

 • 2

  மரபு ரீதியாகக் கடைப்பிடிக்கும் வழிமுறைகள்.

  ‘‘இசைத் துறையில் ஆசாரமான கட்டுப்பாடுகளுடன் தொழில்முறைக் கலைஞர்களாகச் செயல்படுவது கடினம்’ என்றார்’