தமிழ் ஆசைப்படு யின் அர்த்தம்

ஆசைப்படு

வினைச்சொல்-பட, -பட்டு

  • 1

    (ஒன்றைச் செய்ய அல்லது பெற) விரும்புதல்.

    ‘திருமணத்துக்கு முன் மணமகளை ஒருமுறை பார்த்துவிட வேண்டும் என்று என் நண்பர்கள் ஆசைப்பட்டனர்’
    ‘தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள கிராமத்தினர் ஆசைப்பட்டனர்’
    ‘நான் ஆசைப்பட்ட எதுவுமே எனக்குக் கிடைக்கவில்லை என்று அம்மா புலம்பிக்கொண்டிருந்தாள்’