தமிழ் ஆட்கொள் யின் அர்த்தம்

ஆட்கொள்

வினைச்சொல்

  • 1

    (இறைவன் செயலாகக் கூறும்போது) அடியாராக ஏற்றுக்கொள்ளுதல்.

    ‘ஞானாசிரியன் வடிவில் தோன்றித் தன்னை இறைவன் ஆட்கொண்ட கருணையை நினைத்து அவர் வியந்தார்’

  • 2

    (உணர்ச்சி, சிந்தனை முதலியவை ஒருவரை) வசப்படுத்துதல்.

    ‘தாயார் இறந்துபோனதால் ஏற்பட்ட சோகம் அவளை ஆட்கொண்டது’
    ‘மனித வாழ்வின் அவலம் பற்றிய சிந்தனை அவரை முழுமையாக ஆட்கொண்டது’