தமிழ் ஆட்டம் யின் அர்த்தம்

ஆட்டம்

பெயர்ச்சொல்

 • 1

  குலுக்கலுடன் கூடிய அசைவு.

  ‘அவர் முகத்தில் வியர்வை; உடம்பில் ஆட்டம், குடித்திருப்பாரோ?’
  ‘வண்டியின் ஆட்டத்தில் தூக்கம் வந்துவிட்டது’

 • 2

  நடனம்.

  ‘கதகளி கலைநயம் பொருந்திய ஆட்டம்’

 • 3

  விளையாட்டு.

  ‘கால்பந்தாட்டம்’
  ‘சீட்டாட்டம்’

 • 4

  விளையாட்டை ஆடும் முறை அல்லது கடைப்பிடிக்கும் உத்திகள் போன்றவை.

  ‘இன்றைய ஆட்டத்தில் அவருடைய வழக்கமான திறமை வெளிப்படவில்லை’
  ‘இன்று உன் ஆட்டம் மிகப் பிரமாதம்’
  ‘டெண்டுல்கரின் ஆட்டத்தில்தான் வேகப்பந்தை எப்படி விளையாடுவது என்பது தெரியும்’

 • 5

  (விளையாட்டில்) ஒருவருடைய முறை.

  ‘இப்போது உன்னுடைய ஆட்டம்தான், விளையாடு!’

 • 6

  (டென்னிஸ் போன்ற விளையாட்டுகளில் புள்ளிகளுக்கான) அடிப்படை அலகு.

  ‘டேவிஸ் கோப்பைப் போட்டியில் இந்தியா இரண்டாவது செட்டிலும் மூன்று ஆட்டங்களை வென்று வலுவான நிலையில் இருக்கிறது’

 • 7

  (பிறர் விரும்பாத அல்லது அங்கீகரிக்காத) அடக்கமில்லாத ஆர்ப்பாட்டமான நடத்தை.

  ‘இளமையில் அவர் ஆடாத ஆட்டமா?’
  ‘அதை வாங்கித்தா, இதை வாங்கித்தா என்று சொல்லி ஆட்டமா போடுகிறாய்?’

 • 8

  (திரையரங்கத்தில்) படக்காட்சி.

  ‘இரண்டாவது ஆட்டம் பார்த்துவிட்டு வந்து தூங்குகிறான்’
  ‘அந்தக் காலத்தில் எம்.ஜி.ஆர் படம் வெளியானால் முதல் நாளே முதல் ஆட்டமும் இரண்டாம் ஆட்டமும் பார்த்துவிட்டுதான் வருவேன்’