தமிழ் ஆட்டமிழ யின் அர்த்தம்

ஆட்டமிழ

வினைச்சொல்-இழக்க, -இழந்து

  • 1

    (கிரிக்கெட், கபடி போன்ற விளையாட்டுகளில் விதிகளின்படி) ஒருவர் மேற்கொண்டு விளையாட முடியாமல் ஆகுதல்.

    ‘முதலில் களம் இறங்கிய இந்திய வீரர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் அற்புதமாக ஆடி 110 ஓட்டங்கள் எடுத்தார்’
    ‘என் நண்பர் களத்தில் நுழைந்தால் ஒரே நேரத்தில் ஐந்து பேரைக்கூடக் கபடியில் ஆட்டமிழக்கச் செய்துவிடுவார்’