தமிழ் ஆட்டிப்படை யின் அர்த்தம்

ஆட்டிப்படை

வினைச்சொல்-படைக்க, -படைத்து

 • 1

  ஆழ்ந்த பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் (உணர்வு அல்லது நோய் முதலியவை) ஆதிக்கம் செலுத்துதல்.

  ‘அவளுக்குத் தான் சரியான ஜோடி இல்லை என்ற குறை அவனை ஆட்டிப்படைத்தது’
  ‘சாதி, மத, மொழிப் பிரச்சினைகள் நம்மை ஆட்டிப்படைக்கின்றன’

 • 2

  தான் விரும்பியபடியெல்லாம் பிறரை நடக்கச்செய்தல்; ஆட்டிவைத்தல்.

  ‘அனைவரையும் ஆட்டிப்படைத்த சர்வாதிகாரிக்கு எதிராக மக்கள் புரட்சிசெய்தனர்’
  ‘நகரத்தையே ஆட்டிப்படைத்த ரவுடியைக் காவல்துறையினர் கைதுசெய்தனர்’