தமிழ் ஆட்டு யின் அர்த்தம்

ஆட்டு

வினைச்சொல்ஆட்ட, ஆட்டி

 • 1

  (ஒன்றை) அசைத்தல்.

  ‘நாய் வாலை ஆட்டியபடியே அருகில் வந்தது’
  ‘அவர் குழந்தைகளைப் பார்த்துக் கையை ஆட்டினார்’
  ‘சரி என்று தலையை ஆட்டினான்’
  ‘ஏணியை ஆட்டாமல் கீழே இறங்கி வா’

 • 2

  உலுக்குதல்; குலுக்குதல்.

  ‘குதிரைமேல் சேணத்தை வைத்துக் கட்டிவிட்டு ஆட்டிப்பார்த்தான்’
  ‘காசு இருக்கிறதா என்று உண்டியலை ஆட்டிப்பார்த்தான்’
  ‘புளிய மரத்தின் கிளையை ஆட்டியதும் சடசடவென்று புளியம்பழங்கள் கீழே விழுந்தன’

 • 3

  (ஊஞ்சல், தொட்டில் போன்றவற்றை) முன்னும் பின்னுமாகப் போய்வரச்செய்தல்.

  ‘ஊஞ்சலில் உட்கார்ந்து அதைக் காலால் ஆட்டிக்கொண்டே பேச ஆரம்பித்தார்’

 • 4

  (இயந்திரத்தில் இட்டுக் கரும்பு முதலியவற்றை) பிழிதல்/(இயந்திரத்தில் மாவு முதலியவற்றை) அரைத்தல்.

  ‘கரும்பு ஆட்டிவிட்டீர்களா?’
  ‘எண்ணெய் ஆட்டும் செக்கு’
  ‘தோசைக்கு மாவு ஆட்ட வேண்டும்’