தமிழ் ஆடிப்போ யின் அர்த்தம்

ஆடிப்போ

வினைச்சொல்-போக, -போய்

  • 1

    (எதிர்பாராத துயரமான செய்தி, நிகழ்ச்சி போன்றவற்றால்) மிகவும் பாதிப்பு அடைதல்.

    ‘விபத்தில் மகன் மரணமடைந்ததைக் கேட்டு அவர் ஆடிப்போனார்’

  • 2

    (உடல்) கட்டுக் குலைதல்; தளர்தல்.

    ‘கல் மாதிரி இருந்த உடம்பு நோய்க்குப் பிறகு ஆடிப்போய்விட்டது’