தமிழ் ஆடுகளம் யின் அர்த்தம்

ஆடுகளம்

பெயர்ச்சொல்

 • 1

  கூத்து நடைபெறுவதற்கு உரிய இடம்.

  ‘சூத்திரதாரி ஆடுகளம் வந்தவுடன் அறிமுகத்தோடு கூத்து தொடங்கும்’

 • 2

  (பொதுவாக) விளையாட்டுப் போட்டிகள் நடக்கும் இடம்/(குறிப்பாக) கிரிக்கெட் மைதானத்தின் நடுவில் மட்டையாளருக்கும் பந்து வீசுபவருக்கும் இடையில் நீள்செவ்வக வடிவில் உருவாக்கப்படும் தரைப் பகுதி.

  ‘கால்பந்து போட்டி நடக்கும் ஆடுகளத்தினுள் பார்வையாளர்கள் புகுந்து ரகளை செய்தனர்’
  ‘வேகப்பந்து வீச்சுக்கு ஏற்ற ஆடுகளங்களை இந்தியாவில் அமைக்க வேண்டும்’
  ‘ஆடுகளத்தைச் சேதப்படுத்தியதற்காக அந்த வீரர் நடுவரால் தண்டிக்கப்பட்டார்’
  ‘கபடி விளையாடும் ஆடு களத்தின் அளவு என்ன?’