தமிழ் ஆட்சி யின் அர்த்தம்

ஆட்சி

பெயர்ச்சொல்

 • 1

  (மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களோ அதிகாரத்தைக் கைப்பற்றியவர்களோ நடத்தும்) அரசு நிர்வாகம்.

  ‘தேர்தலில் வெற்றி பெறும் கட்சி ஆட்சியை அமைக்கிறது’
  ‘பல மாநிலங்களில் ஆட்சியைக் கைப்பற்றிய தேசியக் கட்சி இது’
  ‘ஆசிய நாடுகள் பலவற்றில் இராணுவத் தளபதிகள் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளனர்’
  உரு வழக்கு ‘என் வீட்டில் என்னுடைய மனைவியின் ஆட்சிதான்’

 • 2

  (அரசன் போன்றோரின்) ஆளுகை; அரசாட்சி.

  ‘மௌரியரின் ஆட்சிக் காலம்’
  ‘சோழர்களின் ஆட்சி’

 • 3

  (சொல்) எடுத்தாளப்படுதல்.

  ‘கம்பனின் சொல்லாட்சி’

 • 4

  சோதிடம்
  ஒரு வீட்டில் குறிப்பிட்ட ஒரு கிரகத்தின் செல்வாக்கு அதிகமாக இருக்கும் நிலை.

  ‘சூரியனுடைய ஆட்சி மூன்றாம் இடத்தில் உச்சத்தில் உள்ளது’