தமிழ் ஆண் யின் அர்த்தம்

ஆண்

பெயர்ச்சொல்

 • 1

  உயிரினங்களில் கருத்தரிக்காததும் கருத்தரிக்கச் செய்யும் திறனைக் கொண்டதுமான இனம்; விலங்குகளில் விந்தும் தாவரங்களில் மகரந்தமும் கொண்ட இனம்.

  ‘ஆண் யானை’
  ‘ஆண் குழந்தை’
  ‘ஆண் கிளி’

 • 2

  மனித இனத்தில் மேற்குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த ஒருவர்.

  ‘இரண்டு ஆண்களும் மூன்று பெண்களும் வராந்தாவில் உட்கார்ந்திருந்தார்கள்’