தமிழ் ஆணை யின் அர்த்தம்

ஆணை

பெயர்ச்சொல்

 • 1

  உத்தரவு; கட்டளை.

  ‘இன்னும் இருபத்து நான்கு மணி நேரத்துக்குத் திட உணவு எதுவும் சாப்பிடக் கூடாது என்பது மருத்துவரின் ஆணை’
  ‘ஊதிய உயர்வு தொடர்பாக அரசு விரைவில் ஓர் ஆணை பிறப்பிக்கும்’

 • 2

  (கணிப்பொறியில் குறிப்பிட்ட செயலைச் செய்வதற்காக) மேற்கொள்ளப்படும் இயக்க முறை.

 • 3

  (சாட்சி சொல்பவர் செய்யும்) சத்தியப் பிரமாணம்.

  ‘இறைவன்மேல் ஆணையாக நான் கூறுவது எல்லாம் உண்மை, உண்மையைத் தவிர வேறில்லை’

 • 4

  வாக்குறுதி கொடுக்கும்போதும் சூளுரைக்கும்போதும் ஒருவர் தான் மிகவும் போற்றும் அல்லது மதிக்கும் ஒருவரைச் சாட்சியாகக் கொண்டு கூறும் சொல்.

  ‘என் தாய்மீது ஆணை; பழிக்குப்பழி வாங்கியே தீருவேன்!’
  ‘உன்மேல் ஆணை; இனிமேல் நான் குடிக்கவே மாட்டேன்’