தமிழ் ஆத்திரப்படு யின் அர்த்தம்

ஆத்திரப்படு

வினைச்சொல்-பட, -பட்டு

 • 1

  (அநியாயம், இயலாமை போன்றவற்றால்) மனம் கொதித்தல்; கோபப்படுதல்.

  ‘ஆத்திரப்படாமல் நிதானமாக யோசி என்று பெரியவர் புத்திமதி கூறினார்’
  ‘வரி பாக்கிக்காக வீட்டுக் கதவைத் தலையாரி கழட்டிக்கொண்டு போனதைப் பார்த்துத் தெருவே ஆத்திரப்பட்டது’

 • 2

  வட்டார வழக்கு அவசரப்படுதல்.

  ‘இன்றே மின் கட்டணம் செலுத்த வேண்டும் என்று ஏன் ஆத்திரப்படுகிறாய். வருகிற புதன்கிழமைவரை அபராதம் இல்லாமல் பணம் கட்டலாம்’