தமிழ் ஆத்திரம் யின் அர்த்தம்

ஆத்திரம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  (இயலாமை, ஏமாற்றம் முதலியவற்றால் ஏற்படும்) மனக் கொதிப்பு; கோபம்.

  ‘அப்பா திட்டிவிட்டுப் போன பிறகு அவளுக்கு அழுகையும் ஆத்திரமுமாக வந்தது’
  ‘பதவி உயர்வு இந்த வருடமும் கிடைக்கவில்லை என்று தெரிந்ததும் ஏற்பட்ட ஆத்திரத்தை எப்படி அடக்கிக்கொள்வது என்று அவனுக்குத் தெரியவில்லை’

 • 2

  படபடப்பு; அவசரம்.

  ‘வீடு வாங்க வேண்டும் என்ற ஆத்திரம் மட்டும் இருந்தால் போதாது’
  ‘ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு என்பார்கள்’