தமிழ் ஆதரவு யின் அர்த்தம்

ஆதரவு

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  (ஒருவருக்கு அல்லது ஒன்றுக்கு உதவியாக இருக்கும்) ஒத்துழைப்பு.

  ‘இந்தக் கட்சிக்கு மக்களின் பெருத்த ஆதரவு உள்ளது’
  ‘உங்களுடைய ஆதரவு இருந்தால் மட்டுமே நான் தேர்தலில் வெற்றி பெற முடியும்’

 • 2

  (ஒரு கருத்துக்கு, திட்டத்துக்குக் கிடைக்கும்) ஒப்புதல்; ஆமோதிப்பு.

  ‘கூட்டத்தினர் கையைத் தூக்கி ஆதரவு தெரிவித்தனர்’

 • 3

  பக்கபலம்; அன்பான துணை.

  ‘அந்த அனாதைப் பையனுக்கு இருந்த ஒரே ஆதரவு அந்தக் கிழவிதான்’

 • 4

  (ஒருவரிடம்) காட்டும் பரிவு.

  ‘மகளை ஆதரவோடு அணைத்துக்கொண்டு தலையைத் தடவிக்கொடுத்தாள்’
  ‘அவனுடைய தோளை ஆதரவுடன் பற்றி ஆறுதல் சொன்னான்’

 • 5

  (செடி முதலியவற்றுக்குக் கொடுக்கப்படும்) முட்டு; ஆதாரம்.

  ‘கொடிக்கு ஆதரவாகக் கம்பை நட்டு வைத்தான்’

 • 6

  அருகிவரும் வழக்கு (ஒன்றை நிரூபிப்பதற்கான) சான்று.

  ‘அவர் தனது முடிவுகளுக்கு ஆதரவாக வேதங்களிலிருந்து மேற்கோள் தந்திருக்கிறார்’