தமிழ் ஆதரி யின் அர்த்தம்

ஆதரி

வினைச்சொல்ஆதரிக்க, ஆதரித்து

 • 1

  ஒத்துழைப்பு வழங்குதல்; ஊக்குவித்தல்.

  ‘இந்தத் தொகுதியில் உள்ள விவசாயிகள் யாரை ஆதரிக்கிறார்களோ அவர்தான் வெற்றி பெறுவார்’

 • 2

  (அன்புடன்) வளர்த்தல் அல்லது உதவுதல்.

  ‘பெற்றோர் இல்லாத தன்னை ஆதரித்த பெரியவர் காலமானபோது அவன் கலங்கிப்போனான்’

 • 3

  ஏற்றுக்கொள்ளுதல்.

  ‘சரித்திரப் பின்னணியில் பார்த்தால் இந்த முடிவை ஆதரிக்க வேண்டியிருக்கும்’