தமிழ் ஆதாரம் யின் அர்த்தம்

ஆதாரம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  (ஒன்றின்) ஆரம்ப இடம் அல்லது மூலம்.

  ‘தமிழ்ப் பத்திரிகைகளில் வெளியான செய்திக்கு ஆதாரம் ஓர் ஆங்கில வார இதழ்’

 • 2

  மற்றொன்று தோன்றுவதற்குக் காரணமாக இருப்பது; அடிப்படை.

  ‘ஓர் உண்மைச் சம்பவத்தை ஆதாரமாக வைத்துதான் இந்தக் கதை எழுதப்பட்டிருக்கிறது’
  ‘என்னுடைய கருத்துக்கு ஆதாரமாக உங்கள் முந்தைய கட்டுரையை எடுத்துக்கொள்கிறேன்’
  ‘மனித வாழ்க்கையின் ஆதாரமான குறிக்கோள் பரம்பொருளை அறிதல் என்று சமய நூல்கள் கூறுகின்றன’
  ‘நமது கல்வி அமைப்புகளுக்கு ஆதாரமான கோட்பாடுகளை வலுப்படுத்த வேண்டும்’

 • 3

  (பெரும்பாலும் பெயரடையாக) மிகவும் அவசியமானது.

 • 4

  தகவலை உண்மை என்று நிறுவுவது; சான்று.

  ‘சம்பவம் நடந்த தினத்தன்று நீங்கள் ஊரில் இல்லை என்பதற்கு ஆதாரம் உண்டா?’

 • 5

  தாங்கி நிற்பது; முட்டு.

  ‘சுவர் சாயாமல் இருப்பதற்காக மூங்கிலை ஆதாரமாக வைத்திருந்தார்கள்’

 • 6

  (ஒன்று இருப்பதற்கான) மூலம்.

  ‘நீர் ஆதாரங்கள் குறைந்துவருகின்றன./’
  ‘நிதி ஆதாரங்களுக்கு நாம் போதிய கவனம் செலுத்தவில்லை’