தமிழ் ஆதி யின் அர்த்தம்

ஆதி

பெயர்ச்சொல்

 • 1

  தொடக்கக் காலம்; முதல்.

  ‘வால்மீகியை ஆதிகவி என்பார்கள்’
  ‘மகாபாரதத்தின் சில கிளைக் கதைகள் ஆதியில் நாட்டுப்புறக் கதைகளாக இருந்திருக்கலாம்’
  ‘ஆதியில் திருப்பி அனுப்பப்பட்ட என்னுடைய கதைகள் சில இப்போது திருத்தம் பெற்று வெளிவருகின்றன’

 • 2

  தொடக்கம் அறியப்பட முடியாத பழமை.

  ‘ஆதி சிவன்’

 • 3

  அடிப்படை; மூலம்.

  ‘இதற்கெல்லாம் ஆதி காரணம் நம் முயற்சியின்மைதான்’