தமிழ் ஆதிக்கம் யின் அர்த்தம்

ஆதிக்கம்

பெயர்ச்சொல்

 • 1

  பிறரைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நிலை; அதிகாரம் மேலோங்கிய நிலை.

  ‘வல்லரசுகளின் ஆதிக்கப் போக்கு’

 • 2

  செல்வாக்கு ஓங்கியிருக்கும் நிலை.

  ‘கிரிக்கெட் விளையாட்டில் இலங்கையின் ஆதிக்கம் குறைந்துவிட்டது’
  ‘போக்குவரத்துத் துறையில் அரசு நிறுவனங்களின் ஆதிக்கம் மேலோங்கி இருக்க வேண்டும்’
  ‘அந்நியர் படையெடுப்பு, ஆதிக்கம் இவற்றால் நாடுகளின் சரித்திரங்கள் மாறுகின்றன’

 • 3

  பாதிப்பு; தாக்கம்.

  ‘அவருடைய எழுத்தில் ஐரோப்பிய இலக்கியத்தின் ஆதிக்கம் அதிகம்’