தமிழ் ஆபாசம் யின் அர்த்தம்

ஆபாசம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  கீழ்த்தரமான முறையில் பாலுணர்வைத் தூண்டிவிடக் கூடியது.

  ‘ஆபாசக் காட்சிகள் நிறைந்த படம் தடைசெய்யப்பட்டது’
  ‘படம் முழுதும் ஒரே ஆபாசம்’

 • 2

  தரக் குறைவு; கீழ்த்தரம்.

  ‘குழந்தையை ஏன் ஆபாசமான வார்த்தைகளால் திட்டுகிறாய்?’

 • 3

  அருகிவரும் வழக்கு அருவருப்பான கழிவுப் பொருள்.

  ‘பன்றி ஆபாசத்தில் கிடந்து புரண்டு எழுந்தது’