தமிழ் ஆமத்துறு யின் அர்த்தம்

ஆமத்துறு

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு பௌத்தத் துறவி; பிக்கு.

    ‘அவருடைய இரண்டாவது பையன் ஆமத்துறு ஆகிவிட்டான்’
    ‘சின்ன வயதிலிருந்தே ஆமத்துறு ஆக வேண்டும் என்பது அவன் விருப்பம்’
    ‘ஆமத்துறுவுக்கு இன்று எங்கள் வீட்டில் தானம் கொடுத்தோம்’