தமிழ் ஆமோதி யின் அர்த்தம்

ஆமோதி

வினைச்சொல்ஆமோதிக்க, ஆமோதித்து

 • 1

  ஒப்புக்கொள்ளுதல்; ஏற்றுக்கொள்ளுதல்.

  ‘அவர் சொன்னதை எல்லோரும் ஒருமனதாக ஆமோதித்தனர்’
  ‘அவளுடைய வாதத்தை ஆமோதிப்பதுபோல நண்பர் புன்னகைபுரிந்தார்’

 • 2

  அருகிவரும் வழக்கு வழிமொழிதல்.

  ‘குழுவின் தலைவர் கொண்டுவந்த தீர்மானத்தை உறுப்பினர் ஒருவர் ஆமோதித்தார்’