தமிழ் ஆயா யின் அர்த்தம்

ஆயா

பெயர்ச்சொல்

 • 1

  (வீட்டில் அல்லது பள்ளியில்) குழந்தைகளைக் கவனித்துக்கொள்ள நியமிக்கப்பட்டிருக்கும் பணிப்பெண்.

 • 2

  மருத்துவமனையில் பணிபுரியும் கடைநிலைப் பெண் ஊழியர்.

  ‘நோயாளியின் அறையை ஆயா சுத்தம்செய்துகொண்டிருந்தாள்’

 • 3

  வட்டார வழக்கு வயது முதிர்ந்த பெண்மணியை மரியாதையுடன் அழைக்கப் பயன்படுத்தும் சொல்.

  ‘ஆயா! மூன்று முழம் பூ கொடு’

 • 4

  வட்டார வழக்கு பாட்டி.