தமிழ் ஆயினும் யின் அர்த்தம்

ஆயினும்

இடைச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு ‘ஆனாலும்’ என்ற பொருளில் இரண்டு வாக்கியங்களை இணைக்கும் இடைச்சொல்.

    ‘பல நூல்கள் வெளியாகின்றன. ஆயினும் படிக்கத் தகுந்த நூல்கள் குறைவே’
    ‘இவர்கள் அனைவரும் அமெரிக்கர்களே. ஆயினும் உருவத்திலும் நிறத்திலும் வேறுபாடு உடையவர்கள்’
    ‘பிரபல நடிகர்கள் இந்தப் படத்தில் நடிக்கவில்லையாயினும் படம் தோல்வி அடைந்துவிடவில்லை’