தமிழ் ஆரத்தி யின் அர்த்தம்

ஆரத்தி

பெயர்ச்சொல்

 • 1

  (மணமக்கள், பெரியவர்கள் முதலியோரை வரவேற்கும் விதமாகவும் திருமணம் போன்ற மங்கல நிகழ்ச்சிகளின் இறுதியிலும் வழிபாட்டின் முடிவிலும் மங்கலத்தின் அறிகுறியாக) தாம்பாளத்தில் மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்ததால் சிவப்பு நிறத்தில் இருக்கும் நீர்.

  ‘பெண்ணும் மாப்பிள்ளையும் வந்துகொண்டிருக்கிறார்கள். ஆரத்தி கரைத்துத் தயாராக வைத்திருக்கிறீர்களா?’
  ‘மணமக்களுக்கு ஆரத்தி சுற்றியதும் ஆரத்தியைத் தெருவில் ஊற்றிவிட்டு வந்தாள்’
  ‘முகத்தில் ஆரத்தியை இறைத்ததுபோல் ஒரு செம்மை!’

 • 2

  (கோயிலில் சம்பிரதாயமான வழிபாட்டின் முடிவில்) கற்பூரத்தை அல்லது தீபத்தை ஏற்றி தெய்வ விக்கிரகத்தின் முன் சுற்றுதல்.

  ‘கற்பூர ஆரத்தி’
  ‘தீப ஆரத்தி’