தமிழ் ஆர்ப்பரி யின் அர்த்தம்

ஆர்ப்பரி

வினைச்சொல்ஆர்ப்பரிக்க, ஆர்ப்பரித்து

  • 1

    (கடல், அலை) ஓசை எழுப்புதல்.

  • 2

    (ஊர்வலம், கூட்டம் போன்றவற்றில் பங்குபெறுவோர் அல்லது ஓரிடத்தில் பெருமளவில் திரண்டிருப்போர்) கோஷமிட்டோ பாராட்டியோ முழங்குதல்.

    ‘பேரணியினர் ஆர்ப்பரித்துக் கடற்கரையை நோக்கிச் சென்றனர்’
    ‘கால்பந்தாட்டப் போட்டியில் தங்கள் அணி கோல் போட்டதும் அதன் ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர்’