தமிழ் ஆர்ப்பாட்டம் யின் அர்த்தம்
ஆர்ப்பாட்டம்
பெயர்ச்சொல்
- 1
(ஒரு கோரிக்கையை வலியுறுத்தி அல்லது ஒன்றை எதிர்த்து) பலர் கூடி எழுப்பும் கோஷங்களுடன் கூடிய கூச்சல்.
‘ஆலை மூடப்பட்டதை எதிர்த்துத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்’‘மாணவர்கள் செய்த ஆர்ப்பாட்டத்தால் அனைத்துக் கல்லூரிகளும் காலவரையறையின்றி மூடப்பட்டன’ - 2
வெற்றுக் கூச்சல்; தேவையற்ற கெடுபிடி.
‘சின்ன விஷயத்திற்கு இப்படியா ஆர்ப்பாட்டம் செய்வது?’‘பையன் பத்து ரூபாயைத் தொலைத்ததற்கு வீட்டில் இவ்வளவு ஆர்ப்பாட்டமா?’ - 3
பகட்டு; ஆரவாரம்.
‘அவர் ஆர்ப்பாட்டம் இல்லாமல் வாழ்ந்துகாட்டியவர்’‘ஆர்ப்பாட்டமான நடிப்பு’‘திருமண வரவேற்பு ஆர்ப்பாட்டமாக நடைபெற்றது’