தமிழ் ஆர்ப்பு யின் அர்த்தம்

ஆர்ப்பு

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு (கதவு, நிலை, நாற்காலி போன்றவற்றைப் பொருத்தப் பயன்படுத்தும்) ஆணிபோல் செதுக்கப்பட்ட சிறிய மரத் துண்டு.

  ‘கதவுக்கு ஆர்ப்பு வைத்து இறுக்கிவிடு’
  ‘காலில் ஆர்ப்பு ஏறி இரத்தம் கொட்டியது’

 • 2

  இலங்கைத் தமிழ் வழக்கு முள்ளின் முனையில் இருக்கும் கூரான பகுதி.

  ‘காலில் குத்திய ஆர்ப்பை உடனே எடுத்துவிடு’
  ‘ஆர்ப்பு குத்தியதைக் கவனிக்காமல் விட்டதால் சிதழ்பிடித்துவிட்டது’