தமிழ் ஆரம்பி யின் அர்த்தம்

ஆரம்பி

வினைச்சொல்ஆரம்பிக்க, ஆரம்பித்து

 • 1

  தொடங்குதல்.

  ‘கடவுள் வாழ்த்துடன் விழா ஆரம்பித்தது’
  ‘சரியாக ஒன்பது மணிக்கு விழாவை ஆரம்பித்துவிட வேண்டும்’
  ‘சில வங்கிகள் காலை எட்டரை மணிக்கே ஆரம்பித்துவிடுகின்றன’
  ‘அவர் ஒரு புதுக் கட்சி ஆரம்பித்திருக்கிறார்’

 • 2

  (வங்கி போன்ற நிறுவனத்தில் பணம் தொடர்பான நடவடிக்கைகளுக்காகக் கணக்கை ஏற்படுத்துதல்).

  ‘என் பெயருக்கு வங்கியில் ஒரு கணக்கு ஆரம்பிக்க வேண்டும்’