தமிழ் ஆரவாரம் யின் அர்த்தம்

ஆரவாரம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  பலர் கூடியிருக்கும் இடத்திலிருந்து எழும் பெரும் உற்சாகத்துடன் கூடிய சத்தம்.

  ‘முன்னணி நடிகர்கள் மேடையில் தோன்றியதும் ரசிகர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்’
  ‘மாணவர்களின் ஆரவாரம் அடங்கச் சிறிது நேரம் ஆயிற்று’

 • 2

  பரபரப்போடு அனைவரையும் ஈர்க்கும் விதத்தில் பேசப்படுவது.

  ‘‘மனிதாபிமானம்’ என்ற சொல் இப்போது ஆரவாரமாகப் பேசப்படுகிறது’
  ‘ஆரவாரம் எதுவும் இல்லாமல் ரயில் கட்டணத்தை உயர்த்திவிட்டார்கள்’

 • 3

  ஆர்ப்பாட்டம்.

  ‘ஆரவாரம் இல்லாமல் வாழ்ந்துவருபவர்’